முக்கியச் செய்திகள் தமிழகம்

கார் டயர் வெடித்து விபத்து: மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி

திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாகர்கோவில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று, இன்று காலை சென்றுகொண்டிருந்தது. திருநெல்வேலி அருகே உள்ள ரெட்டியார்பட்டி 4 வழிச்சாலை வழியாக வந்தபோது, அந்த காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், நிலை தடுமாறிய கார், சாலையின் எதிர் புறத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மருத்துவ மாணவிகள் 2 பேர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கார் டிரைவரும் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவியை அங்கிருந்தவர் கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். கார் மோதி மருத்துவ மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அனந்த கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

மகராஷ்டிராவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நாராயண் ரானே

Vandhana

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அதிமுக வெளிநடப்பு!

Arivazhagan CM