பிச்சைக்காரன்-2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி
என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தாம் தயாரித்த படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், விஜய் ஆண்டனி சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜகணபதியின் படம் குறித்து தமக்கு எந்த தகவலும் தெரியாது எனவும், பிச்சைக்காரன்-2 படத்திற்கும், அவரது படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
படத்தின் கதை கருவை கொண்டு 1944ஆம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி உள்ளதால், கதையின் கருவை உரிமை கொண்டாட முடியாது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.







