தமிழ்நாட்டில் புதிதாக 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 4,862 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 2,131 அதிகமாகும். இது ஏறத்தாழ 2 மடங்கு அதிகமாகும். நேற்றும் இதே போல 2 மடங்கு அதிகமாக தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டது.
இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,60,449 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 688 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 27,07,058 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 16,577 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பை பொறுத் அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 36,814 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை நேற்று சென்னையில் 1,489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,481 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கோயம்புத்தூரில் 259 பேருக்கும் செங்கல்பட்டில் 596 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், 118 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் குணமடைந்துள்ளனர். 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: