முக்கியச் செய்திகள் இந்தியா

அச்சுறுத்தும் கொரோனா; கேரளாவில் முழு ஊரடங்கு

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளதால், இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

ஓணம் பண்டிகைக்காக அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கேரள மாநிலத்தில் போக்குவரத்துகள் ஏதுமின்றி சாலைகள் வெறிச்சோடின. இது தவிர, நாளை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 83 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் உயிரிழந்த நிலையில், 35 ஆயிரத்து 840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 97 புள்ளி 5 3 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

Halley karthi

கும்பமேளா: மத்திய அரசின் மீது மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம்

Gayathri Venkatesan

கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Ezhilarasan