தமிழகம் முழுவதும் 1,25,000 இடங்களில் விநாயகர் சிலைகளுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு தடை விதிக்காது என நம்புகிறோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைப்பது தொடர்பாகவும், இந்துக்களை ஒருங்கிணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இந்து முன்னணி கட்சியின் மாநிலத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் இந்துக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவதாகவும், இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்து முன்னணியில் இணைந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், விரைவில் வரக்கூடிய விநாயகர் சதுர்த்திக்கு தமிழகம் முழுவதுமாக சுமார் 1,25,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அரசு எவ்வாறு ரம்ஜான் மற்றும் பணிமாதா கோவில் திருவிழா நடத்த அனுமதி கொடுத்ததோ அதே போல விநாயகர் சதுர்த்திக்கும் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும்.,
வரும் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவும், டாஸ்மாக் கடைகள் திறந்துள்ள சூழலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கும், சிலை வைக்கவும் அரசு எந்த தடையும் விதிக்காது என நம்புகிறோம் என காலேஸ்வரர் சுப்பிரமணியன் ஜி பேட்டியளித்தார்.