திருடப்பட்ட டாம் குரூஸின் சொகுசு காரை மீட்டது எப்படி?

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் திருடப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களில் வசூலை வாரி குவித்த படம், ‘மிஷன் இம்பாஷிபிள்’.…

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் திருடப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹாலிவுட் படங்களில் வசூலை வாரி குவித்த படம், ‘மிஷன் இம்பாஷிபிள்’. இந்தப் படத்தின் 7-வது பாகம் தற்போது உருவாகிறது. மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்டோபர் மேக்குயரீ (Christopher McQuarrie) இயக்கும் இந்தப் படத்தில், டாம் குரூஸுடன், விங் ராமிச், சைமன் பெக், ரெபெக்கா பெர்குசான் உட்பட பலர் நடிக்கின்றனர். அடுத்த வருடம் மே மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், பிரிட்டனில் நடந்து வருகிறது.

இந்நிலையில், டாம் குரூஸின், பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 என்ற கார் திடீரென திருடப்பட்டது. அதில் இருந்த அவருடைய ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள உடமைகளும் திருடப்பட்டுள் ளன. இந்த சொகுசு கார் பர்மிங்காமின் கிராண்ட் ஹோட்டலுக்கு வெளியே திருடப் பட்டதாகக் கூறப்படுகிறது. நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கார் மாயமானதை நடிகரின் மெய்க்காப்பாளர் கவனித்துள்ளார்.

டாம் குரூசின் காரில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு இருந்ததால், அதைக் கொண்டு காவல் துறையினர் வாகனத்தை மீட்டுள்ளனர். ஆனால், அதிலிருந்த உடமைகள் அனைத்தும் திருடு போயிருக்கிறது. இதுபற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.