கல்லெறிந்தாலே சமூக விரோதிதான்: நடிகர் ரஜினி கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   மத்திய  அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

மத்திய  அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான “ரோஜ்கார் மேளா ” திட்டத்தை  பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான  பணி ஆனையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். மேலும் இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இது முக்கியமான நாள் என்றும், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தாய்மொழியை வளர்க்க திமுக என்ன செய்துள்ளது. இந்தியாவில் அதிக பொறியாளர்கள் உருவாக்கும் தமிழகத்தில், தமிழில் பாடம் உள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், தர்மேந்திர பிரதான் பேசிய போது, இந்தியாவில் நம் அரசின் policy மூன்று மொழி படிக்க வேண்டும். மூன்றாவது மொழி அவரவர் விருப்பம் என்றார் என்பதை அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.


துப்பாக்கி சூடு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் பாரத்தாக சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதில் என்ன தவறு இருக்கிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசயம் அவை. துப்பாக்கி சூடு நடத்தியது தவறா? நடத்திய விதம் தவறு. எடப்பாடி சொன்ன ஒரு கருத்தை திரித்து சொன்னது சரி இல்லை. ரஜினி சொன்ன கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். எனவே, பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் நாங்கள் சமூக விரோதி என்றோம் என்றார்.

திருமாவளவன் , சீமான், கனிமொழி, மு.க.ஸ்டாலின் இவர்கள் எல்லாம் கருத்து சொல்லவில்லையா ? ஆனால் காவல் துறை report வந்தால் அது வேறு மாதிரிதான் இருக்கும். ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது. திரைப்படங்களில் பலர் கருத்து சொல்கிறார்கள் அதை கேட்க வேண்டிய தானே என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.