12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் – சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற நியூ டெல்லி அணி!

தூத்துக்குடியில் நடைபெற்ற 12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் செகந்திரபாத் சவுத் சென்ட்ரல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நியூ டெல்லி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்…

தூத்துக்குடியில் நடைபெற்ற 12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் செகந்திரபாத் சவுத் சென்ட்ரல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நியூ டெல்லி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த 18ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் பங்கேற்பதெற்கென வந்திருந்தன.

16 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று, காலி இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் நியூ டெல்லி, செகந்திராபாத், நியூ டெல்லி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி அணி, நியூ டெல்லி காம்ப்ரேட்டர் அணிகள் இறுதிசுற்றுக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றன.

நேற்றிரவு நடைபெற்ற இறுதி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போட்ர்ஸ் போர்டு அணியும், செகந்திராபாத் சவுத் செண்டரல் ரயில்வே அணியும் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் அணியை வீழ்த்தி நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் அணி வெற்றியை தட்டிச் சென்றது.

மேலும் 3வது மற்றும் 4வது இடங்களுக்கு நடந்த போட்டியில் நியூ டெல்லி காம்ரேட்டர் அணியும், பஞ்சாப் நேஷ்னல் வங்கி அணியும் மோதின. இதில் ஷீட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி அணி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு அர்ஜூனா விருது பெற்ற ஹாக்கி வீரர் முகமது ரியாஸ்,கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் கே,ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் பரிசு கோப்பைகளையும், ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்கினர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.