முக்கியச் செய்திகள் மழை

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

ஈரோடு, திருப்பூர் உட்பட 6 மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று காலை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. அதில், தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அண்மைச் செய்தி: ‘‘அடுத்தவர் தொழிலை குறைவாக பார்ப்பது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல’ – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்’

அதேபோல, வரும் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம் மற்றும் நாமக்கல், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை!

Saravana

நீட் தேர்வு; இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Halley Karthik

இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்தியா

Saravana Kumar