காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளின் போராட்டங்கள் நாட்டிற்கு நல்லதல்ல என மத்திய அரசை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளாதாவது,

“இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தினை உலகமே பார்த்து வருகின்றது. இந்த போராட்டம் குறித்தும், விவசாயிகளின் பிரச்சனை குறித்தும் அரசு ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கின்றது? விவசாயிகளின் போராட்டங்கள் நாட்டிற்கு நல்லதல்ல. டெல்லி விவசாய போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு யார் காரணம்?” என ராகுல் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்விகளை எழுப்பியுள்ளார்.







