முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்- நிதியமைச்சர் விளக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு காரணம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதா? எனவும் அப்படியென்றால் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறித்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து மக்களவையில் விஜய் வசந்த் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் மத்திய நிர்மலா சீதாராமன், ரஷ்யா-உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய நிதி நிலைமைகள் நெருக்கடி போன்ற உலகளாவிய விஷயங்கள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் பவுண்ட், ஜப்பானிய நாட்டின் யென் மற்றும் யூரோவின் மதிப்புகள் இந்திய ரூபாயின் மதிப்பை விட குறைவாக உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நிய செலாவணிகள் பல்வேறு நாடுகளில் மதிப்புகளுக்கு நிகராக இந்திய ரூபாயின் வீழ்ச்சி போன்றவற்றை இந்திய ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதிலிருந்து மீள்வதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2014ம் ஆண்டு 63.33 ரூபாயாக இருந்த நிலையில், 2019ம் ஆண்டில் 71.27 ரூபாயாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டில் 73.05 ரூபாயாகவும், 2021ம் ஆண்டில் 74.30 ரூபாயாகவும், 2022ம் ஆண்டில் 79.41 ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது என மத்திய நிதி அமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram