நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தொடர்ந்து மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களில் 3 மாணவர்கள் நீட் தேர்வுக்கு அஞ்சிக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரியலூர் ரயில் நிலையம் அருகே நடராஜன் – உமா தம்பதியின் மகள் நிஷாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ?
நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்! (1/3) pic.twitter.com/vaUq5Q7sS2
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 18, 2022
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக் கொண்டது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அனிதாவில் தொடங்கிய உயிரிழப்புகள் எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகின்றன? நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்’ காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா? எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







