இதுதான் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்!

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் தேசிய மாணவர்கள் படையினரின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 28-ஆம் தேதி தேசிய மாணவர்கள் படை சார்பில் மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்வுகள் நடைபெறுவது…

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் தேசிய மாணவர்கள் படையினரின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 28-ஆம் தேதி தேசிய மாணவர்கள் படை சார்பில் மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில், டெல்லி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர்கள் படையின் சாசக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தேசிய மாணவர்கள் படையின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தேசிய மாணவர்கள் படையின் அணிவகுப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் சாகச நிகழ்வுகள் மற்றும் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவுடன் பாஜக இன்று மாலை பேச்சுவார்த்தை

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசிய மாணவர்கள் படையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். தற்போது நடைபெற்ற அணிவகுப்பில் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டுள்ளது பெருமையாக உள்ளதாகவும், இதுதான் இந்தியா இன்று ஏற்படுத்தியுள்ள மாற்றம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தானும் என்சிசியில் உறுப்பினராக இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்கள் உறுதியுடனும், ஆதரவுடனும் இருந்தால் நாட்டின் எதிர்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.