தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகிலுள்ள ஒரு சாலைக்கு “டொனால்ட் டிரம்ப் அவென்யூ” என்று அம்மாநில அரசு பெயர் சூட்டி இருந்தது. இந்த சாலை ஐதராபாத்தின் நானக்ராம்குடாவில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் அமேசான் உள்ளிட்ட முக்கிய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.
இந்தப் பெயர் சூட்டல், அமெரிக்காவிற்குச் செலுத்தும் மரியாதை என்றும், அமெரிக்க-இந்திய உறவுகளில் வளர்ந்து வரும் ஐதராபாத்தின் பங்களிப்பிற்கான அங்கீகாரம் என்றும் தெலங்கானா அரசு விவரித்துள்ளது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் ஒரு சாலைக்குத் தன் பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிரூத் சோஷியல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள புதிய ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ — இத்தகைய கௌரவத்தைப் பெறும் முதல் அமெரிக்க அதிபர். நன்றி! அதிபர் டொனால்ட் ஜே. ட்ரம்ப்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





