தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அழிவிழிருந்து பாதுகாக்க இந்த தேர்தல் மிக முக்கியமானது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் மார்ச் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுகவுடன் கூட்டணி வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் “தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தவறான உத்திகளால் கர்நாடக மாநிலம் பாஜக கைக்கு சென்றுள்ளது. இதனால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் இந்திய அளவில் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரஸ் கட்சியின் இடத்தை பிடித்து விடும். காங்கிரஸ் கட்சியை அழிவிழிருந்து பாதுகாக்க இந்த தேர்தல் மிக முக்கியமானது” என தெரிவித்தார்.