மதத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளை நீக்கவில்லை எனக் கூறி விக்கிப்பீடியாவை பாகிஸ்தான் நாடு முடக்கியுள்ளது.
விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுளுக்கு எதிரான மற்றும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கருத்துக்களை விக்கிப்பீடியா 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைதொடர்புத் துறை உத்தரவிட்டது. ஆனால், விக்கிப்பீடியா எந்த கருத்துகளையும் நீக்கவில்லை.
இந்நிலையில், மதம், கடவுளை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை நீக்கப்படாததையடுத்து விக்கிப்பீடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியது. கடவுள் மற்றும் மதம் தொடர்பான அவதூறு கருத்துகள் நீக்கப்பட்ட பின்னரே விக்கிப்பீடியா இணையதளம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா








