உலக வில்வித்தை போட்டியில் பங்குபெறும் மாணவன் – நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று இந்தோனேஷியாவில் நடைபெறும் உலக அளவிலான வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெறும் மாணவனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ. திருவாரூர் மாவட்டம்…

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று இந்தோனேஷியாவில் நடைபெறும் உலக அளவிலான வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெறும் மாணவனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் –
மாதவி தம்பதியின் மகன் சபரீஷ் வயது 17. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து
வருகிறார்.

கடந்த ஏப்ரல் 2023 ல் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்றார். 2023 மே மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் மாணவன் சபரீஷ்
முதலிடத்தை பிடித்து சாதனை புரிந்தார்.

தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தோனேசியாவில் நடைபெறும் உலக அளவிலான வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள இருக்கிறார். உலக அளவிலான போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள இருக்கும் மாணவன் சபரீஷை நேரில் அழைத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா
உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.