திருவள்ளுவர் தினம் – தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் சென்னை மேயர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்.
தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கினார்.
திருவள்ளுவர் விருதை மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கினார்.
அம்பேத்கர் விருதை சிந்தனைச்செல்வனுக்கு வழங்கினார்.
காமராஜர் விருதை எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கினார்.

பாரதியார் விருதை கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கினார்.
பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் யுகபாரதிக்கு வழங்கினார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கு வழங்கினார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை சு.செல்லப்பாவுக்கு வழங்கினார்.

இலக்கிய மாமணி விருது (மரபுத்தமிழ்) த.இராமலிங்கத்திற்கு வழங்கினார்.
இலக்கிய மாமணி விருது (ஆய்வுத்தமிழ்) சி.மகேந்திரனுக்கு வழங்கினார்.
இலக்கிய மாமணி விருது (படைப்புத்தமிழ்) இரா.நரேந்திரகுமாருக்கு வழங்கினார்.
விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.