திருத்தணி அருகே சந்தனம் வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் காந்தியை பெண்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் சந்தன
வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்
ஆர்.காந்தி கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் 100 நாள் பணி செய்யும் பணியாளர்கள் 50 பேரை அமர வைத்திருந்தனர். இவர்கள் தங்கள் பகுதியில் சுடுகாடு இல்லை, 100 நாள் பணிகள் மாதத்தில் மூன்று நாள் மட்டுமே வழங்குகின்றனர், என்று
குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்தநிலையில், அவர்கள் திடீரென அமைச்சர் காந்தியை முற்றுகையிட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெண்களிடம் சமரசம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.
ரெ. வீரம்மாதேவி







