அனுஷ்கா நடித்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அனுஷ்காவை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது. ஆனால் சமீப காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார்.
மகேஷ்பாபு இயக்கத்தில் நவின் பாலிஷெட்டி, ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெறாததால் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







