திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் புல் வளர்த்து, நகராட்சி நிர்வாகம் அழகு பார்ப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்லடம் நகராட்சி தமிழ்நாட்டிலேயே வருவாய் ஈட்டுவதில், 3 வது இடத்தில் உள்ளது. மேலும் 18 வார்டுகளை உள்ளடக்கிய பல்லடம் நகராட்சி, சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டுள்ளது.
இதனிடையே, பல்லடம் நகராட்சி துணை தலைவர் நர்மதா இளங்கோவன் கவுன்சிலராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 13 வது வார்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தார் சாலை
அமைக்கப்பட்டது. இந்த தார் சாலை கையில் மேலோட்டமாக போடப்பட்டதால்,
பாலம் பாலமாக பெயர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் ரூ.85 லட்சம்
மதிப்பீட்டில் போடப்பட்டதாக கூறப்படும் இந்த தார் சாலை, புதிதாக போடப்பட்ட சில
நாட்களிலேயே புல் முளைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது குறித்து கணபதி நகர் பொதுமக்கள் கூறும் போது, அவசரமாக சாலை
பணியை மேற்கொண்டதாகவும், பணி மேற்கொள்ளும் போது கேட்டதற்கு முறையான
பதில் கூற மறுத்ததாகவும் கூறுகின்றனர். இந்த தார் சாலைகளில் வாகன ஓட்டிகள்
சேற்றில் இயக்குவது போல், வாகனத்தை இயக்க வேண்டியுள்ளதாகவும்குற்றம்
சாட்டுகின்றனர்.
இதனிடையே, சாலை பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகாரிகளிடம் சாலையின்
தரம் குறித்து கேட்டதற்கு, அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைப்படித்தான் சாலைகள்
போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும்
விதமாக தரமற்ற தார் சாலைகளை அமைத்ததோடு, அதற்கு ஒரு விளக்கம் அளித்து
அதிகாரி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தரமற்ற தார் சாலை அமைத்து அதன் மீது புல் வந்துள்ளது. இந்த நிலையில்,
நகராட்சி ஒப்பந்ததாரர் மீது, நடவடிக்கை எடுத்து தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கு. பாலமுருகன்







