பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக பல்லடம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பல்லடம் காவல்துறையினர் சொக்கம்பாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
8 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்கள் ,இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் பல்லடம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– அறிவுச்செல்வன். சே







