இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்வதற்கு பாதை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் – குவியும் பாராட்டுகள்!

திருப்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை இடுகாட்டிற்கு  எடுத்துச்செல்ல பாதை இல்லாததால் பாதையை அமைத்துக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம்…

திருப்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை இடுகாட்டிற்கு  எடுத்துச்செல்ல பாதை இல்லாததால் பாதையை அமைத்துக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சி பகுதியில் பண்ணாண்டி குப்பம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இறந்தவர்களின்  உடலை எடுத்துச் செல்ல பாதை இல்லை என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் சம்பவ இடத்தை ஆய்வு
மேற்கொண்டு அவருடைய சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் பாதை அமைத்து
ஏரிக்கரை பகுதியில் உடலை அடக்கம் செய்வதற்கு வழிவகை செய்தார்.

தொடர்ந்து இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஒத்துழைப்பு வழங்கியதால் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித்தனர். நீண்ட காலமாக அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத நிலையில்,  இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல பாதை அமைத்து கொடுத்து வழிவகை செய்தத ஊராட்சி மன்ற தலைவருக்கு  அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.