இலக்கியம் தமிழகம் பக்தி

“இறை நினைவுடன் வாழுதல்”

பன்னிரு திருமுறைகளில் பத்தாவதாக விளங்குவது திருமூலர் அருளிய திருமந்திரம். அதன் சிறப்புகள் குறித்து “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரு மந்திரத்தின் மகிமையை அறிவோம். 

 “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்”

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. (228)

இந்த பாடலின் பொருளாவது,  இளமை கழிவதன் முன் உள்ள நாட்களில் பொருள்சேர் புகழால் திருமுறைவழி இடையறாது போற்றுங்கள்.  ஒவ்வொருவரும் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட நாள்களில் அருள் துணையால் மாசறுத்துத் தூயராய் இறை நினைவுடன் வாழுதல் வேண்டும். இங்ஙனம் ஒழுகாமல் மனம்போல் ஒழுகி வழுக்குற்று இழுக்கடைவாரும் பலர்.  நன்றாற்றுதலாகிய நல்லறஞ் செய்யாது, இளமை சிலர்க்குப் பயன் இன்றிக் கழியக் கண்டேன் என்று உரைக்கிறார்.

-ஜெயநிலா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

70வது பிறந்த தினத்தில் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த விஜயகாந்த்!

Web Editor

23 மணி நேர பயணம்: சென்னை வந்தார் சசிகலா

Nandhakumar

எம்.பி.கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி; ஓரிரு நாளில் வீடு திரும்புவார் எனத் தகவல்

Arivazhagan Chinnasamy