ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில், ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு இன்று செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி
உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள்
கோயிலில், ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு
இன்று செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. இவ்விழாவில், திரளான பக்தர்கள்
பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைனவ தளங்களில் ஒன்றாகவும் , தமிழக
அரசின் முத்திரை சின்னமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

மேலும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நான்கு ரத வீதிகளின் வழியாக
தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் ,
குழந்தை பாக்கியம் இல்லதா தம்பதியினர் விரதம் இருந்து தேரினை வடம் பிடித்து
இழுத்தனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து, இன்று மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள்
ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவை
காண்பதற்க்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான
பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.