திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வெளியிட்டுள்ள உத்தரவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு காவல்துறை தலைவரும், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரை நியமிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: தாம்பரம், கோவை, சேலம் – புதிய மேயர்கள் பதவியேற்பு
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர், தக்கார் ஆகியோர் கோயிலுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








