முடிவுக்கு வரும் மூன்றாம் உலகப் போர் : நாளை இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தியா  தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை கபில்தேவ் தலைமையில் ஜீன் 25 ,1983 வென்றது. இந்தியாவின்…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா  தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை கபில்தேவ் தலைமையில் ஜீன் 25 ,1983 வென்றது. இந்தியாவின் 2- வது உலக கோப்பையை தோனி தலைமையில் 2011 – ல் வெற்றி பெற்றது . தற்போது மூன்றாம் உலகக் கோப்பை வெற்றியை நோக்கி இந்திய அணி அரையிறுதி போட்டியில் வெற்றி வாகை சூடி இறுதி போட்டியை நாளை ஆஸ்திரேலிய அணியுடன் எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி ( 1987, 1999, 2003, 2007, 2015) ‌என 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 5 முறை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக நடைப்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் நாளை நவம்பர்  19 தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி  மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா 9 பேட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ,18 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா 9 போட்டியில் 7 -போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளைக் கொண்டுள்ளது.

நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.