முக்கியச் செய்திகள் கொரோனா

கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது- மகாராஷ்டிரா அமைச்சர்

மகாராஷ்ட்ராவில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,30,58,843 ஆக உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. முன்னதாக அதிக கொரோனா பாதிப்பு பதிவான மகாராஷ்ட்ராவில் கடந்த வாரம் முதல் தொற்று பாதிப்பு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக பதிவாகி வந்தது. இதனால், அங்கு இரண்டாம் அலை கட்டுக்குள் விரைவில் வந்து விடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதாக அம்மாநில எரிசக்தி துறை அமைச்சர் நிதின் ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் நாக்பூரில் தளர்வுகளுடன் இருக்கும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண் ஷிரிஷா பண்டாலா

தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழப்பு?

Gayathri Venkatesan

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: ரூ.25 லட்சம் பறிமுதல்

Halley karthi