திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை, காந்தி என நினைத்துக் கொண்டு கிராம சபை கூட்டம் நடத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை திருவெற்றியூரில் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின், வடநாட்டில் உள்ள ஏஜெண்ட்டுகளை வைத்துக் கொண்டு, மேடைகளில் தவறாக பேசி வருவதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தவறான வழியை பின்பற்றும் திமுகவால் ஆட்சி மாற்றம் எந்த காலத்திலும் ஏற்படாது என குறிப்பிட்ட அவர், நல்லாட்சியை தரமுடியாத ஆட்சியை நடத்திவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வர பரிதவிப்பது ஏன் கேள்வி எழுப்பினார். அதிமுகவின் கடைசி தொண்டன் வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.