இடஒதுக்கீடு விவகாரத்தை ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்: பாலகிருஷ்ணன்

வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு விவகாரத்தை டாக்டர் ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். விழுப்புரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த…

வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு விவகாரத்தை டாக்டர் ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எட்டுவழிச்சாலைக்கான பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், பாட்டாளி மக்கள் கட்சியின் 20 சதவிகித தனி ஒதுக்கீட்டிற்கு நடத்தப்படும் போராட்டங்கள் அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம் எனவும் வன்னிய மக்களுக்கும் இதர சமூகத்திற்கிடையே மோதலை உருவாக்குவது இந்த இட ஒதுக்கீடு என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் 20 சதவிகித இடஒதுக்கீடு அரசியல் ஆதாயத்திற்காகவும் அதிமுகவுடன் கூட்டணிக்கு பேரம் பேசுவதற்காக ராமதாஸ் கருவியாக பயன்படுத்துவதாக கூறினார். மத்திய அரசு பட்ஜெட் பொருத்தவரை இருளில் மூழ்கிய பட்ஜெட் எனவும் இந்தியா இருளில் மூழ்கியிருப்பதற்கு எடுத்துக்காட்டான பட்ஜெட்டாக கருதுவதாக தெரிவித்த அவர் கொரோனோ காலத்தில் மத்திய அரசு கொண்டுவந்த சில முடிவுகள் இந்திய பொருளாதாரத்தையும் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும், கொரனோவில் இருந்து மீட்டெடுப்பதற்கான பட்ஜெட்டாக இல்லை குற்றஞ்சாட்டினார்.

சசிகலாவின் வருகை தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் வருகை அதிமுகவில் வேண்டுமென்றால் தாக்கம் ஏற்படலாம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply