சிறப்பாக ஆட்சி செய்வதை தட்டி கழித்து முழு அடிமையாக இருக்க சொல்கிறார்கள் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக-வின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளித்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவர்கள் கனவு காண்பதற்கு முன்பே பெட்ரோல் 3 ரூபாய் நாம் குறைத்தோம் எனவும், நாடு இன்னமும் ஜனநாயக நாடாக உள்ளதாக நம்புவதாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாமானிய மக்களுக்கு கொடூரமான முறையில் வரியை போட்ட பிறகு, நன்மை செய்வது போல் வரியை பாதியாக குறைத்துவிட்டு நன்கொடை செய்தது போலவும், வள்ளல் போலவும் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். வரலாற்றில் ஒரு பைசா உயர்த்தாதவர்களை துரோகிகள் மாதிரி பேசுவது தவறான கருத்து என தெரிவித்துள்ளார்.
மேதாவியாக கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களை விட ஒரு மடங்கு, 2 மடங்கு சிறப்பாக நாம் செயல்பட்டு வருகிறோம். அதனால், அதனை தட்டி கழித்து நம்மை குறி வைக்கிறார்கள் என சாடிய அவர், நம்மை டெல்லிக்கு முழு அடிமையாக இருக்க எண்ணி பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்