முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுக்கோட்டை அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தில் உள்ள
பெரிய குளத்தில் மத சமூகம் பாகுபாடுகளை கடந்து மீன்பிடித் திருவிழா விமரிசையாக
நடைபெற்று வருகிறது.

விவசாயம் செய்யும் பகுதிகளில் உள்ள குளங்களில் அறுவடைக் காலம் முடிந்து பின்
அப்பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் சாதி சமூக
பாகுபாடுகளைக் கடந்து ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மீன்பிடி விழாக்கள்
நடத்தப்படுவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆண்டும் பல்வேறு கிராமங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு பின் வெகு விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் பெரிய குளத்தில்
காலை முதலே நடைபெற்று வரும் மீன்பிடி திருவிழாவில் மக்களின் ஆராவாரத்துடனும்
மகிழ்ச்சியுடன் பங்கேற்று மீன்பிடித்து வருகின்றனர்.

இதுபோன்று மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்படுவது மூலம் அப்பகுதி கிராமங்களில்
சமூக ஒற்றுமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம்
செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மழை காலங்களில் குளங்களில் நிரம்பும் நீரில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் மீன்
குஞ்சுகளை வாங்கி குளத்தில் விடுவதும் நீர் வற்றியவுடன் அந்த மீன்களை ஊர்
பொதுமக்களை நல்ல நாள் நேரம் பார்த்து ஒரே நாளில் பிடித்துக்கொள்ள பாரம்பரிய
மீன்பிடி திருவிழாவின் நோக்கமாகும்.

ராப்பூசல் பெரியகுளமானது கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் நிளமுடையது. இந்த
மீன்பிடி விழாவில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கனக்கானோர் பங்கேற்றனர்.

ராப்பூசல் கிராமத்தில் இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில்
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கச்சா, கூடை,  வலை, பரி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு நாட்டு வகை மீன்களான விரால், கெண்டை, கெளுத்தி, குறவை உள்ளிட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றனர்.

சாதி, மத பாகுபாடுகளை கடந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலவச சிலம்ப பயிற்சி; இளைஞர்களின் புதிய முயற்சி

Halley Karthik

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது

G SaravanaKumar

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சட்டசபையில் தீர்மானம்: கமல் கோரிக்கை

Gayathri Venkatesan