பாமகவை வன்முறை கட்சி என்று பேசுகிறார்கள், நாங்கள் பேச ஆரம்பித்தாள் தாங்க மாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அரியலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பாமக வின் 35 ஆண்டு துவக்க விழாவினை நடத்த தமிழக அரசு தடை விதித்தது
கண்டனத்திற்குரியது. கடந்த 35 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை பாமக கொண்டு வந்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது, கிராம சுகாதார திட்டம் மற்றும் பல்வேறு ரயில்வே திட்டங்கள் பாமகவால் வந்தது.
நாங்கள் இல்லை என்றால், நாங்கள் போட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது. பாமக தயவால் தான் 2006 ஆம் ஆண்டு 96 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு 5 ஆண்டுகள். ஆட்சியில் இருந்தார்கள். இதனை ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
என்எல்சிக்கு அடிமையாக திமுக அரசு இருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக திமுக செய்த வன்முறை சம்பவங்கள் போன்ற பல சம்பவங்களை சொல்ல முடியும். செப்டம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசு காவிரியில் 60 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். ஆனால் 2.5 டிஎம்சி தண்ணீர் தான் தந்துள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று நீரை பெற்று தரவேண்டும்.
அரியலூர் சோழர் பாசன திட்டத்தை தொடங்க வேண்டும். கேஸ் விலையை எப்போதோ குறைத்து இருக்க வேண்டும் . பெட்ரோல் டீசல் விலையையும் குறைத்து இருக்க வேண்டும்.
10.5 உள் ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டவில்லை. கருணாநிதி இருந்திருந்தால் கொடுத்து இருப்பார். கருணாநிதி ஆட்சி நடத்துகிறோம் என்று
சொல்பவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இனியும் பொறுக்க முடியாது. விரைவில்
மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.







