மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலமுடன் வீடு திரும்பினார்!

தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று அதிகாலை நடைபயிற்சி முடித்து விட்டு, பார்வையாளர்களை சந்திக்கும்போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. தொடர்ந்து,…

தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று அதிகாலை நடைபயிற்சி முடித்து விட்டு, பார்வையாளர்களை சந்திக்கும்போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இதய இரத்த நாள பரிசோதனை மேற்கொண்டதில், குறிப்பிடத்தக்க அடைப்பு இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.