”என்னுடைய காட்சிகளை நீக்கிவிடுங்கள் “ – ஷாருக்கான் பற்றிய சீக்ரெட்டை உடைத்த படத் தொகுப்பாளர் ரூபன்

”என்னுடைய காட்சிகளை நீக்கிவிடுங்கள் “ என  ஜவான் இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் பற்றிய சீக்ரெட்டை பற்றி படத் தொகுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார். இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக…

”என்னுடைய காட்சிகளை நீக்கிவிடுங்கள் “ என  ஜவான் இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் பற்றிய சீக்ரெட்டை பற்றி படத் தொகுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.  நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என படக்குழு அறிவித்திருந்தது.  இதனிடையே இன்று மாலை சென்னை தாம்பரத்தில் உள்ள தனியர் கல்லூரியில்  நடைபெறும் இசை வெளியீட்டு விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா மாலை தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ , விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி , யோகி பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பேசிய ஜவான் படத்தின் படத் தொகுப்பாளர் ரூபன் தெரிவித்ததாவது..

” சாவையே காட்சிப்படுத்துகிற வில்லன்தான் விஜய் சேதுபதி; தூக்கத்துல கூட அந்த வில்லன் கதாபாத்திரத்தை பத்தி யோசிக்கும் போது பயம் வருது. அந்த அளவிற்கு விஜய் சேதுபதி இப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

எடிட்டிங் சமயத்தில் படத்தின் நீளம் அதிகமாக இருக்கும் போது என்னுடைய காட்சிகளை வெட்டிவிடுங்கள் மற்றவர்களின் காட்சிகளில் கை வைக்காதீர்கள் என்று ஷாரூக்கான் சொன்னார் “ என ரூபன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.