முக்கியச் செய்திகள் இந்தியா

 சபரிமலை வளர்ச்சி பணி மேற்கொள்வதில் நிதி நெருக்கடி; தேவஸ்வம் போர்டு

சபரிமலை வளர்ச்சி பணி மேற்கொள்வதில் நிதி நெருக்கடி நிலவுவதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் என்.வாசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயிலுக்கு பெரும்பாலும் பக்தர்கள் தமிழ்நாடு, அந்திராவில் இருந்தே வருகிறார்கள். கடந்த 2 வருடமாக சபரிமலை உட்பட அனைத்து கோவில்களின் வருவாய் குறைந்துள்ளது. இதனால், சபரிமலை வளர்ச்சி பணி மேற்கொள்வதில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வரும் நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாமல் அனைவரையும் கோயிலுக்கு அனுமதிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தங்குவதற்கு தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. விரைவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் தரிசனத்திற்கு எந்தவிதமான தடையும் ஏற்படாமல் வசதிகளை ஏற்படுத்தித் தர அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

யாருடைய வருகையும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது- அமைச்சர் பாண்டியராஜன்!

Jayapriya

பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

Gayathri Venkatesan

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

Gayathri Venkatesan