சிறைகளில் சாதிரீதியான பாகுபாடு கூடாது – தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சாதி ரீதியான பாகுபாடு கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி தொடர்பான தகவல்களை சிறைத்துறை காவலர்கள் கேட்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள சிறையில் ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சாதி ரீதியாக கைதிகளை வகைப்பாடு செய்யக்கூடாது என சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார், அரசிதழில் வெளி​யிட்ட அறிக்கையில்,

“சிறைக்கு கைதி​கள் வரும்​போது, சாதி குறித்த தகவல்​களை கேட்​டுப்பெறக்​கூடாது. பதிவேடு, ஆவணங்​களில் சாதி விவரங்​களை இடம்​பெறச் செய்​யக்​கூ​டாது.

சாதி அடிப்​படை​யில் பிரி​வினைக் காட்​ட​வோ, பிரித்​து​ வைக்​கவோ கூடாது. சாதி அடிப்​படை​யில் பணி​களை ஒதுக்​கீடு செய்​யக்​கூ​டாது. குறிப்​பாக, மனிதக் கழி​வு​களை சுத்​தம் செய்ய வைப்​ப​தோ, கழி​வுநீர் தொட்​டியை சுத்​தம் செய்​யும் பணி​களில் ஈடு​படச் செய்​வதோ கட்​டா​யம்​ கூடாது.” இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.