26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை -திருநாவுக்கரசர் எம்.பி

கல்வி பொது பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறினார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் என்று திறந்து வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், கல்வி பொது பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. தமிழக முதல்வர் இன்று பிரதமரிடம் இது குறித்து கோரிக்கை வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கு இன்று பிரதமர் நாளை உள்துறை அமைச்சர் வருவதால் எந்த அரசியல் தாக்கமும் ஏற்படப்போவது கிடையாது என்றார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேர் விடுதலை தொடர்பாக அந்த நிகழ்வின் போது இறந்த குடும்பத்தினர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது காங்கிரஸ் கட்சி மேல் முறையீடு செய்வதை தலைமை தான் முடிவு எடுக்கும் மத்திய அரசு இந்த விஷயத்தில் நாட்டு நலனுக்கு எது உகந்ததோ என்பதை நினைத்து பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், 10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு நாளை நடத்த உள்ள சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள கலந்து கொள்வதா வேண்டாமா என்பதை அகில இந்திய தலைமை முடிவெடுத்து மாநில தலைமையிடம் அறிவிக்கும் அதை பொறுத்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெரியும் என கூறினார்.

அத்துடன், கோவை நிகழ்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது ஆனால் அதை வைத்துக்கொண்டு ஒரு சமுதாயத்தையோ ஒரு பிரிவினரையோ குற்றவாளிகள் போல சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது இந்த நிகழ்வை நடுநிலையாக விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

காமராசருக்காக மண்டபத்தை மாற்றிய கலைஞர்-மனம் திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D

குழந்தையை தாக்கிய கொடூர தாய்க்கு மனநல பாதிப்பில்லை

G SaravanaKumar

தர்ணாவில் அமர்ந்த மாற்றுத்திறனாளி; ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளர்- கோவையில் பரபரப்பு!

Web Editor