முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுக-பாஜக உறவில் விரிசல் இல்லை”- எடப்பாடி பழனிசாமி

அதிமுக, பாஜக உறவு நல்ல முறையில் உள்ளது. அதிமுக-பாஜக உறவில் விரிசலும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பயணியர் மாளிகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளை சந்தித்த பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் ஆத்தூரில் நடைப்பெற்ற திமுக கூட்டத்தில் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடிக்கும், சேலம் மாவட்டத்திற்கும் எதுவுமே செய்யவில்லை என பொய்யாக கூறியுள்ளார். எடப்பாடி தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் தான் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தார்சாலை, EB கோட்டம், நெடுஞ்சாலைத்துறை கோட்டம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்ததை பட்டியலிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும், எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று கூறிய திமுக இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இரண்டாவது முறையாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த போதும் மாநில அரசு குறைக்கவில்லை.

தமிழகத்தில் மின்சாரம் எப்பொழுது வருகிறது எப்பொழுது போகிறது என்பது தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான முதல் கையெழுத்து போடப் படும் என்று கூறியது ஏமாற்றுவேலை. கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்த சட்டத்தை நிறைவேற்ற வில்லை. அனைத்து துறைகளிலும் அதிக ஊழல் செய்த மாநிலம் தமிழ்நாடு எனவும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கிறார்கள்.இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். விசைத்தறி தொழில் தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

கடலூரில் 7 பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. அரசு ஏரி குளங்களை பராமரிப்பதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். மணல் எடுப்பதுதான் விபத்துக்கு காரணம். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். அதிமுக-பாஜக உறவில் விரிசல் இல்லை. அதிமுக பாஜக உறவு நல்ல முறையில் உள்ளது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம் – ஜி.கே.வாசன்

NAMBIRAJAN

மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Halley Karthik

அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றார் ஜோ பைடன்

Jeba Arul Robinson