முக்கியச் செய்திகள் தமிழகம்

’பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை’ – அமைச்சர் பெரியகருப்பன்

பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் அமைந்துள்ள வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது 293வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்று வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பரிசு தொகையை நியாயவிலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகள் விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும் நியாயவிலைக் கடைகள் நவீனப்படுத்தப்பட்டு, தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

EZHILARASAN D

எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

G SaravanaKumar

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

Halley Karthik