பதவி ஆசை எனக்கு கிடையாது – அன்புமணி ராமதாஸ் ஓபன் டாக்….

விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், தான் 35 வயதில் மத்திய அமைச்சராக இருந்துள்ளேன் என்றும் தனக்கு பதவி ஆசை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.   விழுப்புரத்தில் உள்ள…

விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், தான் 35 வயதில் மத்திய அமைச்சராக இருந்துள்ளேன் என்றும் தனக்கு பதவி ஆசை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும் என்றார். தற்போது அரசியல் மாறியுள்ளது என்றும் வியாபாரிகள், தொழிலாளர்கள் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் என தெரிவிப்பதாகவும், அனைத்து கிராமங்களில் பாமக கொடி பறக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

எந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பலமாக இளைஞர்கள் பாமகவில் உள்ளதாக குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், கட்சி தொடங்கியதிலிருந்து பாமக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்ற வருத்தம் தனக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். பாமகவில் பல்வேறு திட்டங்கள் உள்ளன என்ற அவர், பதவி ஆசை தனக்கு இல்லை என்றும், 35 வயதில் மத்திய அமைச்சாரக இருந்துள்ளேன் அனைத்து தலைவரையும் பார்த்துவிட்டேன் என்றும் கூறினார். ஏழை பணக்காரன் வித்தியாசம் அதிகமாக உள்ளது. பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என அனைத்து கட்சியினரும் ஏற்று கொண்டுள்ளனர். பள்ளி மாணவிகள் மது அருந்துகிறார்கள், மாணவர்கள் ஆசிரியரை மிராட்டுகிறார்கள் கலாச்சார சீரழிவு வருத்தமளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் தேக்க நிலை பல ஆண்டுகளாக உள்ளது என்ற அவர், தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் அப்படி என்றால் அதிகாரம் வேண்டும்.. அதிகாரம் இல்லாதபோதே நிறைவு செய்துள்ளோம். பல ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் ஆட்சியில் உள்ளது. எந்த முன்னேற்றமும் இல்லை அதனால் நமக்கான களம் காத்துள்ளது என்றார். பாமக ஆட்சியில் கல்விக்கும் மருத்துவத்துக்கும் ஒரு பைசா மக்கள் செலவு செய்ய கூடாது..விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கவும் வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்..தேர்தல் வந்தால் மட்டும் நந்தன் கால்வாய் விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் என இருகட்சிகள் மாறி மாறி கூறுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் கடைசி மாவட்டமாக விழுப்புரம் உள்ளது.

 

தமிழ்நாட்டில் வன்னியர் தாழ்த்தப்பட்ட சமுதாயம் 40 விழுக்காடு உள்ளது.. எனவே 10.5 சதவிகிதம் விழுக்காடு மிக மிக குறைவு, இதுவும் புள்ளி விவரங்கள் இல்லை என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார். முதலமைச்சரை சந்தித்து 10.5 சதவிகித இடஒதுக்கீடு பெற கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்த அவர், இடஒதுக்கீடு தொடர்பாக போராட வாய்ப்பு இருக்காது என நம்புவதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.