தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் முழு மதுவிலக்கை  அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் குடிபோதையில் கணவன் மனைவிக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது. இதில் குடிபோதையில்…

தமிழகத்தில் முழு மதுவிலக்கை  அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் குடிபோதையில் கணவன் மனைவிக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது. இதில் குடிபோதையில் இருந்த கணவர் தனது 2 வயது குழந்தையை சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், குடிபோதையில்  2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மதுவால் அரங்கேறும் கொடூர சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, “குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழ்நாட்டை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி. அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!” என வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.