மதுரை வக்பு போர்டு கல்லூரியை துவம்சம் செய்து சிவகங்கை கே.எல்.என் பொறியியல் கல்லூரி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மண்டலம் சிவகங்கை கே.எல்.என். பொறியியல் கல்லூரி மைதானத்தில், இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றுக்கான தகுதிச் சுற்றில், சிவகங்கை கே.எல்.என் பொறியியல் கல்லூரி அணியும், மதுரை வக்பு போர்டு
கல்லூரி அணியும் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டாஸ் வென்ற மதுரை வக்பு போர்டு கல்லூரி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கே.எல்.என் பொறியியல் கல்லூரி, ஆரம்பம் முதலே
நிதானமாக விளையாடி படிப்படியாக ரன்களை சேர்த்தது. இறுதியாக 19.5 ஓவரில் கே.எல்.என் பொறியியல் கல்லூரி அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 108
ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை வக்பு போர்டு கல்லூரி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், கே.எல்.என் பொறியியல் கல்லூரி அணியின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பரிகொடுத்தது. இறுதியாக 16.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 79 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம் சிவகங்கை கே.எல்.என் பொறியியல் கல்லூரி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.என் கல்லூரி வீரர் ரவிச்சந்திரன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். நடுவர்களான வெங்கடேஷ்வரன் மற்றும் ஜேம்ஸ் வசந்த், ஆட்டநாயகனான ரவிச்சந்திரனுக்கு விருதை வழங்கினர். இப்போட்டியின் வெற்றி மூலம் சிவகங்கை கே.எல்.என் பொறியியல் கல்லூரி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.