“என்னை விட அழகான பெண்கள் இருக்கிறார்கள்” – ராஷ்மிகா மந்தனா!

ஆங்கில தொலைகாட்சி நேர்காணலில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னைவிட அழகான மற்றும் திறமையான பல பெண்கள் உள்ளதாகவும்,  தன்னுடைய வெற்றி சாதாரணமானது அல்ல என்று கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர்…

ஆங்கில தொலைகாட்சி நேர்காணலில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னைவிட அழகான மற்றும் திறமையான பல பெண்கள் உள்ளதாகவும்,  தன்னுடைய வெற்றி சாதாரணமானது அல்ல என்று கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’,  ‘சீதாராமம்’,  ‘கீத கோவிந்தம்’  உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  அர்ஜுன் ரெட்டி புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ திரைப்படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதையும் படியுங்கள் : “இபிஎஸ்-ன் பாதகச் செயல்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்… மன்னிக்கவும் மாட்டார்கள்…” – திமுக கடும் சாடல்!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர்கள் அல்லு அர்ஜூன்,  கார்த்தி,  விஜய்,  ரன்பீர் கபூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்திய திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.  தற்போது புஷ்பா 2 திரைபடத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில்,  அண்மையில் ஆங்கில தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ராஷ்மிகா கூறியதாவது :

“என்னால் வெற்றியை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது.  என்னைவிட அழகான திறமையான பல பெண்கள் இருக்கிறார்கள்.  ஆனால்,  எனக்கு கிடைத்த வாய்ப்பினால் நான் இப்போது இருக்கும் இடத்தினை நினைத்து பெருமைப்படுகிறேன்.  கடந்த சில ஆண்டுகளா நான் அடைந்த வெற்றிகளை சாதாரனமாக எடுத்துகொள்ள முடியாது.  அதை நான் எனது உழைப்பினால் சம்பாதித்துள்ளேன். அதற்காக நன்றியுணர்வுடன் இருக்கிறேன்”

இவ்வாறு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.