தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் சடலம் மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரிய குளத்தை சேரந்த ராமு உயிரிழந்தார். ராமுவின் உடலுக்குப் பதில் நிலக்கோட்டையை சேர்ந்த அய்யாவுவின் உடல் ராமுவின் உறவினர்களிடம் கொடுக்கப்படது. ராமுவின் உறவினர்கள் அய்யாவுவின் உடலை எரித்து விட்டனர்.

இதற்கிடையே அய்யாவுவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் அய்யாவுவின் உடலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தவறை செய்த மருத்துவ ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் உறுதி அளித்ததை அடுத்து அய்யாவு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.







