மகாராஷ்டிராவில் ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நெடி பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை நிர்வாகத்தினர் பாராட்டிக் கௌரவப்படுத்தி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தின் 2-ம் நடைமேடையில் பார்வையற்ற தாய் தன்னுடைய குழந்தையுடன் நடந்து சென்றனர். அப்போது ரயில்வே நடைமேடையின் தண்டவாளம் அருகே வந்த குழந்தை நிலை தடுமாறி தண்டவாளத்தினுள் விழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தண்டவாளத்தின் மறுபுறத்தில் ரயில் வந்துகொண்டிருந்த நிலையில் மற்றொரு புறத்திலிருந்து மின்னல் வேகத்தில் ஓடி வந்த மயூர் ஷெல்கே என்னும் ரயில்வே ஊழியர் குழந்தையை தண்டவாளத்திலிருந்து மேலே தூக்கிவிட்டு அவரும் விரைவாக அங்கிருந்து தப்பிக்கிறார். நொடிபொழுதி இந்த நிகழ்வு நடந்து முடிய ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்கிறது.
ஏப்ரல் 17-ம் தேதி நடந்த இந்த நிகழ்வு நேற்றில் இருந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே நிர்வாகத்தில் சூழ்ந்து நின்று கைதட்டி தங்களுடைய பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.
தன் உயிரையும் துச்சமென நினைத்து குழந்தை காப்பற்ற மயூர் ஷெல்கேயின் நடவடிக்கையை சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.