மதுரையில் போராட்டத்தில் கலந்துகொண்ட தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர்!

மதுரையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனும் பங்கேற்றார். இது குறித்த நியூஸ் 7 தமிழ் தமிழ்-க்கு அவர்…

மதுரையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனும் பங்கேற்றார்.

இது குறித்த நியூஸ் 7 தமிழ் தமிழ்-க்கு அவர் அளித்த பேட்டியில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் மதுரையில் போராட்டத்தில் பங்கேற்க காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.

’மாநகராட்சி ஆணையர் என்னை அவமானம் செய்து விட்டார். தூய்மை பணியாளர்களிடம் நேரில் குறைகளை கேட்க சொன்னேன், அதற்கு மாநகராட்சி ஆணையர் மறுத்து விட்டார். என்னிடம் மாநகராட்சி ஆணையர் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னை அவமானப்படுத்திய மாநகராட்சி ஆனையர் குறித்து குடியரசு தலைவரிடம் புகார் கொடுப்பேன்’ என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.