ஓடிடியில் விஜய்யின் ‘ #TheGoat ‘ – வெளியான அப்டேட்!

விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த திரைப்படம் ‘தி கோட்’. லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின்…

TheGoat ,TheGreatestOfAllTime , Vijay ,ThalapathyVijay ,VenkatPrabhu ,Archanakalpathi ,Netflix

விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த திரைப்படம் ‘தி கோட்’. லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது திரைப்படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ்’ படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கினார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்குமேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. நீளம் கருதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் ஓடிடியில் வெளியாகும் என முன்னரே இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார். 

இதையும் படியுங்கள் : சிவாஜி கணேசன் 97-வது பிறந்தநாள் | சிவாஜி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் #MKStalin

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அக். 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஓடிடியில் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.