மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா..!

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மாசி பெருவிழாவின் ஐந்நாம் நாளில் தீ…

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மாசி பெருவிழாவின் ஐந்நாம் நாளில் தீ மிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா,கர்நாடகா, புதுச்சேரி,தெலுங்கான என வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி வருகிறார்கள்.

பக்தர்களின் வசதிகாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து வசதியும், கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.