முக்கியச் செய்திகள் இந்தியா

நடுரோட்டில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து, தவம் செய்த இளைஞர்!

நடுரோட்டில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து, தவம் செய்து தனியாளாகப் போராட்டம் நடத்தி சம்பவம் கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை, மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பல விபத்துகள் நடக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்த அவல நிலை குறித்து அதிகாரிகளின் கவxனத்திற்குக் கொண்டு செல்ல சாலையில் உள்ள பள்ளத்தில் குளித்தும், துணிகளைத் துவைத்தும், மலப்புரத்தைச் சேர்ந்த ஹம்சா என்ற இளைஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மலப்புரம் பாண்டிக்காடு சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!’

பாண்டிக்காட்டில் இருந்து பாலக்காடு செல்லும் சாலைகளில் எங்குப் பார்த்தாலும் குண்டும் குழியுமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் அனைத்து ரோடுகளும் போடப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல அவ்வழியாக வந்த எம்.எல்.ஏ யு.ஏ.லத்தீப் முன் இளைஞர் தவம் செய்ததுடன் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்தும், துணி துவைத்தும் காட்டியுள்ளார்.

மேலும், இங்கு ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதிகாரிகள் கவனம் செலுத்தாத காரணத்தினால் தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேர்களுடன் கூடிய 2 கோடி ஆண்டுகள் பழமையான மரம் : ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

Saravana

இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..!

Jayapriya

“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான்”- நயினார் நாகேந்திரன்

Web Editor